சிறுதானியங்களை எப்படி சமைப்பது — எளிய வழிமுறை
சிறுதானியங்களுக்குப் புதியவரா? அரிசி போலவே சமைக்கலாம். இவை வழக்கமான வீட்டு முறைகள்; உங்களுக்கு ஏற்றபடி தண்ணீரை மாற்றிக்கொள்ளுங்கள்.
- அலசுங்கள்: 2–3 முறை தண்ணீரில் நன்றாக அலசி, தூசி நீக்குங்கள்.
- ஊறவையுங்கள்: சாமை, தினை, வரகு, குதிரைவாலி — 30 நிமிடம் முதல் 2 மணி நேரம். கம்பு, சோளம் — 4–6 மணி நேரம்.
- தண்ணீர்: சாதமாக — 1 கப் தானியத்துக்கு சுமார் 2½–3 கப். பொங்கல், உப்புமா — சுமார் 3–4 கப்.
- சமைக்கவும்: குக்கரில் 2–3 விசில், அல்லது பாத்திரத்தில் மூடி வைத்து மெதுவாக 15–20 நிமிடம்.
- ஆரம்பத்தில்: அரிசியுடன் பாதிக்குப் பாதி கலந்து சமைத்தால் சுவைக்குப் பழகுவது எளிது.
செய்து பார்க்க சமையல் குறிப்புகள்
சிறுதானியப் பெயர்கள் →
மேலும்: சிறுதானியப் பெயர்கள் · பாரம்பரிய அரிசி வகைகள் · இன்றைய விலை
Can't find what you need?
Tell us the product — we'll try to stock it for you. We reply on WhatsApp.
Ask us on WhatsApp